Donald Trump : பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த டொனால்டு டிரம்ப்: வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சூசகம்

PM Modi : சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். மேலும் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து அவர் சூசகமாக கூறியுள்ளார்.

Donald Trump : முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான உறவைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த போது பலமுறை இந்தியா வந்துள்ளார். டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் “ஹவுடி மோடி” என்ற நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. தனது நட்பு குறித்து மீண்டும் ஒருமுறை பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார். மேலும் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் (US presidential election) குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப், நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். தேர்தலில் நான் தலைமை தாங்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

அதே சமயம் பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) குறித்தும் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு பிரதமர் பதவி கிடைத்திருப்பது எளிதான காரியம் அல்ல. இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் எனக்கு சிறந்த உறவு உள்ளது. நாங்கள் நல்ல நண்பர்கள். மேலும் மோடி ஒரு நல்ல மனிதர். மேலும் அவர் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். அவருக்குக் கிடைத்திருப்பது எளிதான வேலையல்ல. நாங்கள் ஒருவருக்கொருவர் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம். மோடி ஒரு நல்ல மனிதர் என்று புகழாரம் சூட்டினார்.

அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும், இது தொடர்பாக இப்போதே உரிய முடிவை எடுப்பேன் என்றும் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். எனது முடிவு நிச்சயம் பலரை மகிழ்விக்கும். கடந்த வாரம் கூட, 2024 அதிபர் தேர்தலில் (2024 presidential election) தான் மீண்டும் போட்டியிடப் போவதாக டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்திருந்தார்.

இப்போது நம்மிடம் இல்லாத பொருளாதாரம் (economy), மீண்டும் சிறப்பாக நாம் பெறப் போகிறோம். பணிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளோம். நான் இருந்த போது இருந்த பொருளாதாரத்தைப் போன்று தற்போது பொருளாதாரம் இல்லை. ஆனால், மீண்டும் வீரு கொண்டு எழுந்து வருவோம், கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்ய முடியாத பல விஷயங்களைச் செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.