North korea: வடகொரியாவில் மேலும் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா

வடகொரியாவில் மேலும் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா

North korea: வடகொரியாவில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா அலை வேகமாக பரவுகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனால் அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் தொற்றுக்கு 2 பேர் பலியாகினர்.

இதனால் இதுவரை இந்த தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 12-ந் தேதிதான் அங்கு கொரோனா பரவலை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்து, பொதுமுடக்கத்தை அமல்படுத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: Group 2: தமிழகம் முழுவதும் குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடக்கிறது