Indonesia stampede : இந்தோனேசியா கால்பந்து மைதானத்தில் மோதல்: நெரிசலில் சிக்கி 125 உயிரிழப்பு

இந்தோனேசியா: Clash at Indonesia football stadium: 125 dead in stampede : இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட ரசிகர்களைக் கலைப்பதற்காக காவல் துறையினர் கண்ணீர்ப் புகை குண்டு வீசினர். இதையடுத்து, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்தனர். 300 க்கு அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங் நகரத்தில் (In the city of Malang) கஞ்ஜுருஹான் மைதானத்தில் அரேமா எஃப்சி, பெர்செபயா ஆகிய இரு அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் முடிவில் பெர்செபயா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தங்கள் அணியின் தோல்வியால் அரேமா அணி ரசிகர்கள் அதிருப்தியடைந்து, விளையாட்டு வீரர்கள் , கால்பந்து அணி அதிகாரிகள் மீது தண்ணீர் பாட்டில்களையும் பிற பொருள்களையும் வீசினர். மேலும் , ஒரே நேரத்தில் ஏராளமானோர் மைதானத்துக்குள் நுழைந்து 23 ஆண்டுகளாக தோல்வியடையாத அரேமா அணி, இந்தப் போட்டியில் ஏன் தோல்வியுற்றது என விளக்கம் அளிக்கக் கோரி அணி நிர்வாகிகளிடம் கேட்டனர். இதனைத் தொடர்ந்து, ரசிகர்களைக் கலைப்பதற்காக காவல் துறையினர் மைதானத்திலும் பார்வையாளர்கள் இருக்கைகளை நோக்கியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி, தடியடியும் நடத்தினர்.

இதனால் மைதானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. பீதியடைந்த ரசிகர்கள் மைதானத்தைவிட்டு வெளியேற முயன்றபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்தனர் . 300 க்கு அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 35 பேர் மைதானத்திலேயும், மற்றவர்கள் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். ‘ பார்வையாளர்களை நோக்கி காவல் துறையினர் நேரடியாக கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதால் (Throwing tear gas shells) பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மைதானத்துக்கு வெளியேயும் வன்முறை நிகழ்ந்தத். காவல் துறையின் 5 வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன‌.

இது குறித்து கிழக்கு ஜாவா காவல் துறை தலைவர் நிகோ அஃபின்டா (East Java Police Chief Nico Affinta) கூறுகையில் , போலீஸார் மீது ரசிகர்கள் தாக்குதல் நடத்தத் தொடங்கும் முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இறுதியாகத்தான் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசினோம் என தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள்125 பேர் என மத்திய காவல் துறைத் தலைவர் லிஸ்ட்யோ சிஜித் பிரபோவா உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்தையடுத்து ‘ பிரீமியர் கால்பந்து லீக் லிகா 1 ‘ தொடரை இந்தோனேசிய கால்பந்து சங்கம் தற்காலிகமாக ரத்து செய்தது. எஞ்சியுள்ள ஆட்டங்களில் அரேமா அணி விளையாடவும் தடை விதித்தது. ஃபிஃபா ‘ கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இது ஒரு கருப்பு தினம் என்றும் , புரிந்துகொள்ள முடியாத சோகம் என்றும் ‘ சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ கூறியுள்ளார்.