Elephant procession in Dasara festival : தசரா விழாவின் யானை ஊர்வலத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை தொடக்கி வைக்கிறார்

தசராவையொட்டி மின் விளக்குகளில் ஜொலிக்கும் மைசூரு அரண்மனை.

மைசூரு : Chief Minister Basavaraj Bommai inaugurates elephant procession in Dasara festival : மைசூரில் புதன்கிழமை ( அக். 5) உலகப்புகழ்பெற்ற தசரா விழாவின் யானைகள் ஊர்வலத்தை (ஜம்பு சவாரி) கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து நடைபெறும் தீப்பந்த ஊர்வலத்திலும் அவர் பங்கேற்கிறார்.

கி.பி. 1610 ஆம் ஆண்டில் மைசூரு மன்னர் ராஜா உடையாரால் தொடங்கி வைக்கப்பட்ட தசரா திருவிழா (Dasara festival was started by King Raja Wodeyar of Mysore), 413 ஆவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இவ்விழா புதன்கிழமை மைசூரில் நிறைவடைகிறது. 2022 செப் . 25 ஆம் தேதி தொடங்கி 10 நாள்களாக நடைபெற்று வந்த தசரா விழாவின் அங்கமாக நடைபெறும் யானைகள் ஊர்வலத்தை மைசூரு, அரண்மனை வளாகத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார்.

யானை ஊர்வலத்தில் அபிமன்யு, லட்சுமி, சைத்ரா உள்ளிட்ட 14 யானைகள் (14 elephants including Abhimanyu, Lakshmi, Chaitra in elephant procession) கலந்துகொள்கின்றன. நிகழாண்டில் 750 கிலோ எடை கொண்ட தங்கப் பல்லக்கை (அம்பாரி) அபிமன்யு யானை சுமக்கிறது. இதைத் தொடர்ந்து , கர்நாடக அரசின் அலங்கார வாகனங்கள் பின்தொடரும். 5 கி.மீ. தூரத்திற்கு செல்லும் யானைகள் ஊர்வலம் பண்ணிமண்டபத்தில் நிறைவடைகிறது . இதைக் காண சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருப்பார்கள்.

முன்னதாக , அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள நந்திக்கொடி மரத்துக்கு மகர லக்னத்தில் மதியம் 2.36 மணி முதல் 2.50 மணிக்குள் முதல்வர் பசவராஜ் பொம்மை சிறப்பு பூஜை செய்கிறார் (Chief Minister Basavaraj bommai will perform a special pooja to the Nandigudi tree in Makara Lagna between 2.36 pm to 2.50 pm.). இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாதா ஜோஷி, மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் சுனில்குமார், மைசூரு மாநகராட்சி மேயர் சிவக்குமார், மாவட்ட ஆட்சியர் பகடி கௌதம், மாநகர காவல் ஆணையர் சந்திரகுப்தா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

யானைகள் ஊர்வலம் பண்ணிமண்டபத்தை அடைந்ததும், தசரா விழாவின் நிறைவை குறிக்கும் வகையில் நடைபெறும் தீப்பந்த ஊர்வலத்தை இரவு 7 மணிக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைக்கிறார் (Governor Thawar Chand gehlot will inaugurate). இந்த விழாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். தசரா விழாவையொட்டி மைசூரு விழாக்கோலம் பூண்டுள்ள போலீஸ் பாதுகாப்பு : யானைகள் ஊர்வலம் , தீப்பந்த ஊர்வலத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் மைசூருக்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.