Britain PM: ரிஷி சுனக் பாதை இன்னும் சீரானது: பிரதமர் போட்டியில் இருந்து விலகிய போரிஸ்..!

ரிஷி சுனக் எம்.பி.க்கள் மற்றும் கன்சர்வேடிவ் கட்சி தொண்டர்களின் ஆதரவைப் பெற்றுள்ளதால், அவர் பிரதமர் ஆவது உறுதியாகிவிட்டது.

பிரிட்டன்:  Britain PM: பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்த பிறகு, அரசியல் சுவாரஸ்யமாகியுள்ளது. அடுத்த பிரதமர் யார் என்ற ஆர்வம் அனைவரிடமும் உள்ளது. பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்த போரிஸ் ஜான்சன் போட்டியிலிருந்து விலகியதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் பிரதமராவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

கடந்த வாரம், லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ததால், பிரிட்டன் பிரதமர் பதவி காலியாக உள்ளது (With the resignation of Liz Truss, the post of British Prime Minister is vacant). பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன் மற்றும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவராக உள்ள பென்னி மோர்டான்ட் ஆகியோர் உள்ளனர். இதில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இம்முறை பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகியுள்ளார். ரிஷி சுனக் எம்.பி.க்கள் மற்றும் கன்சர்வேடிவ் கட்சி தொண்டர்களின் ஆதரவைப் பெற்றுள்ளதால், அவர் பிரதமர் ஆவது உறுதியாகிவிட்டது. கன்சர்வேடிவ் கட்சியின் 146 எம்.பி.க்களின் ஆதரவை ரிஷி பெற்றுள்ளதாகவும், ரிஷி சுனக்கிற்கு பொதுமக்களிடம் இருந்தும் பெரும் ஆதரவு கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

போரிஸ் விலக காரணம் என்ன..?
பல முறைகேடுகளில் சிக்கிய போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பின்னர் அவர் மீண்டும் பிரதமர் போட்டியில் தோன்ற விரும்பினார். ஆனால் தற்போது மீண்டும் அவர் பிரதமர் பதவிக்கு தான் ஆசைப்படவில்லை என்று கூறி போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ரிஷி சுனக்கிற்கான பாதை மேலும் சீரானது.

தனது முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன், ‘சில நாட்களாக நிறைய யோசித்து இந்த முடிவுக்கு வந்துள்ளேன். பாராளுமன்றத்தில் கட்சியின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது (Party unity in Parliament is very important). இதனால் நான் பிரதமர் போட்டியில் இருந்து விலகினேன். இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அவருக்கு ஆதரவு இருக்கும் என்றார்.