இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா இழுபறி

sri-lanka-crisis
இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா இழுபறி

Sri lanka economic crisis: இலங்கையில் மேலும் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, மந்திரிசபையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இது பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இலங்கையில் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தநிலையில், கடந்த 9-ந் தேதி, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே, கடந்த 12-ந் தேதி பதவி ஏற்றார்.

இலங்கையில் 19-வது அரசியல் சட்ட திருத்தம் மூலம், அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டு இருந்தன. கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆனவுடன், அதை ரத்து செய்து, 20ஏ அரசியல் சட்ட திருத்தம் மூலம் நாடாளுமன்றத்தை விட அதிபருக்கு அளவற்ற அதிகாரங்கள் அளிக்கப்பட்டன.

அதிபருக்கு எதிர்ப்பு எழுந்துள்ள சூழ்நிலையில், அவரது அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின.

இதற்காக 21-வது அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கான மசோதா, நேற்று இலங்கை மந்திரிசபையின் பரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுவதாக இருந்தது.

இதையும் படிங்க: Monkey pox: தடுப்பூசிகளுக்கு திட்டமிட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அறிவுறுத்தல்