பில்கேட்சுக்கு கொரோனா தொற்று

பில்கேட்சுக்கு கொரோனா தொற்று
பில்கேட்சுக்கு கொரோனா தொற்று

Bill Gates Tests Covid Positive: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ இரு ஆண்டுகளைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51.83 கோடியாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 47.31 கோடியாகவும் உள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62.79 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், உலக பணக்காரர்கள் வரிசையில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிறிய அளவிலான அறிகுறிகள் தெரிந்தது. எனவே தொற்றில் இருந்து குணமாகும் வரை என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Massive earthquake: அர்ஜெண்டினாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்