Earthquake in Andaman: அந்தமான் நிக்கோபாரில் 4.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு

அந்தமான் நிக்கோபாரில் 4.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு
அந்தமான் நிக்கோபாரில் 4.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு

Earthquake in Andaman: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில் நேற்று இரவு 11.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவான நிலநடுக்கம் திக்லிபூரில் இருந்து 3 கி.மீ., தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் எதிரொலியாக உயிரிழப்போ அல்லது உடமைகள் சேதம் ஏற்பட்டது குறித்து தகவல் இல்லை.

இதையும் படிங்க: அடுத்தவர்களுடைய வஸ்திரம் மற்றும் நகைகளை நாம் அணியலாமா? கூடாதா?