Teen Grandma love: பாட்டி வயது பெண்ணின் காதலில் விழுந்த சிறுவன்

teen
பாட்டி வயது பெண்ணின் காதலில் விழுந்த சிறுவன்

Teen Grandma love: காதலுக்கு கண் இல்லை என்பது வெறும் பழமொழி அல்ல. இந்த பழமொழியை உண்மையாக்கி உலகம் முழுவதும் காட்டியுள்ளார் 19 வயது சிறுவன். 19 வயது சிறுவனுக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அந்த பெண் அவரின் வயதுடைய பெண் அல்ல. மாறாக, அவளுக்கு 76 வயது, அது அவருடைய பாட்டியின் வயது. இவர்களின் திருமணம் இணையதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இருந்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை என்று சிறுவன் கூறியிருக்கிறான். 19 வயதான கியூசெப் டி’அன்னா தனது பாட்டியின் வயதுடைய பெண்ணுடன் திருமண படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார்.அதில் ​​அவருக்கு வாழ்த்துகள் கிடைக்கும் என்று நினைத்தார்.

ஆனால், அந்தப் படங்களைப் பார்த்ததும் மக்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்காமல், விமர்சனங்களை மட்டுமே பெற்றுள்ளார். அன்னா பதிவிட்ட படங்களில் ஒன்றில் அவர் தனது காதலிக்கு சாரி பாட்டிக்கு காதலை பிரபோஸ் செய்வதாகக் காணப்படுகிறது. அவர் முழங்கால் போட்டு அமர்ந்து இதய வடிவில் பல சிவப்பு பலூன்களை வைத்திருக்கிறார்.

வேறு ஒரு புகைப்படத்தில், அவர் தபாட்டியை முத்தமிடுவதைக் காணலாம். பல போட்டோக்களை இணைத்து, வீடியோவாக தயாரித்து வெளீயிட்டு உள்ளார். இதனை இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இதில் அவர், ‘எங்கள் வாக்குறுதி’ என்று தலைப்பிட்டுள்ளார். தன் காதலிக்கு கொடுத்த மோதிரத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பலர் சிறுவன் பாட்டியின் பணத்தை பார்த்து திருமணம் செய்து உள்ளார் என்று கூறி உள்ளனர்.

இதையும் படிங்க: Tobacco products: புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை- தமிழக அரசு