கேரளாவில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ்

கேரளாவில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளதையடுத்து, அங்கு ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கோவிட் வைரஸ் 2வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளதாவது: கேரள மாநிலத்தில் ஏற்கனவே மொத்தம் 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பூந்துராவை சேர்ந்த 41 வயது நபர். மற்றொருவர் சாத்தமங்கலத்தைச் சேர்ந்த 35 வயது நபர் ஆவார்.

இவர்களின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைளை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.