ஜிகா வைரஸ் தொற்று நோய் கிடையாது !

இந்தியாவை கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வெகுவாக தாக்கியது.இதனை சமாளிக்க மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

தற்போது கேரளா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஒரு புறம் கொரோனா மற்றும் தற்போது ஜிகா வைரஸ் என கேரளாவை வாட்டி வருகிறது.

மேலும் ஜிகா வைரஸ் கரோனாவைப் போல் தொற்று நோய் அல்ல என்று டெல்லி மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மருத்துவர் நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும்கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 98 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் 0.2% என்றளவிலேயே உள்ளது.ஜிகா வைரஸ் இந்தியாவுக்குப் புதிதல்ல. ஜிகா வைரஸ் பரவல் இருக்கும் மாநிலமோ நகரமோ கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும் ஜிகா வைரஸ் கரோனாவைப் போல் தொற்று நோய் அல்ல. ஆனால், ஜிகா வைரஸை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.