இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உத்தரகண்டில் உள்ள உலக பிரபலமான கேதார்நாத் கோவில் ஆறு மாதங்களுக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது.
கரோனா தொற்று காரணமாக கோவில் திறப்பு விழா பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. லிங்க வடிவில் காட்சி அளிக்கும் கேதாரீஸ்வரருக்கு பிரதமர் மோடி சார்பில் முதல் சிறப்பு பூஜை நடந்தது.
மேலும் அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் கூறுகையில்,நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்தை அருளும்படி பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.
கேதார்நாத் கோவில் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுதோறும் நவம்பரில் மூடப்பட்டு அடுத்த ஆண்டு மே மத்தியில் திறக்கப்படுவது வழக்கம் என்றார்.



