வொண்டர் வுமன்’ இரண்டாம் பாகம் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது

கேல் கடோட் நடிப்பில் உருவாகியுள்ள ‘வொண்டர் வுமன் 1984’ ஒரே நாளில் திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் பட்டி ஜென்கின்ஸ், “ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் தாண்டி நம்மிடம் இருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர நாம் முடிவெடுக்க வேண்டும். எங்கள் ரசிகர்களைப் போலவே எங்கள் திரைப்படத்தையும் நாங்கள் விரும்புகிறோம். அது இந்த விடுமுறைக் காலத்தில் உங்களுக்கு சிறு சந்தோஷத்தையும் ஆறுதலையும் தரும் என நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.