Budget 2022: விவசாயிகளின் எதிர்பார்ப்பு பட்ஜெட்டில் பூர்த்தியாகுமா?

will-the-farmers-expectation-be-met-in-the-budget-2022
விவசாயிகளின் எதிர்பார்ப்பு

Budget 2022: விவசாயிகளிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை அமையும் என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் வரும் சனிக்கிழமை அன்று வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி மாநில அளவிலான விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சென்னை சேப்பாக்கத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வேளாண் நிதி நிலை அறிக்கையை தயார் செய்வதற்கு முன்பாக 250-க்கும் மேற்பட்ட விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாக கூறினார்.

எனவே சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் வேளாண் பட்ஜெட் விவசாயிகளிடம் பெறப்பட்ட கருத்துகள் அடங்கியதாக இருக்கும் எனக் கூறினார். விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு இந்த வேளாண் பட்ஜெட்டில் நிச்சயம் விடை கிடைக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: MK Stalin: பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்