பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டிக்கும் ராகுல் காந்தி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய-மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு போன்ற காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை 90 ரூபாய்க்கு மேல் விற்பனையாவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் கலந்துரையாடல் நடத்தினார். இதை முன்வைத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மத்திய அரசின் வரிவிதிப்பு காரணமாக, வாகனங்களின் எரிபொருள் டேங்கை நிரப்புவதும் ஒரு தேர்வுக்கு குறையாத சவாலாகத்தான் இருக்கிறது. அப்படியிருக்க பிரதமர் மோடி ஏன் இது குறித்து விவாதிப்பதில்லை?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.