மதத்திணிப்பை எப்போது நாம் கேள்வி கேட்கப்போகிறோம்?

A-young-man-who-slept-with-a-mosquito-net-burned
இளைஞர் உயிரிழப்பு

தஞ்சாவூரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட மாணவி விடுதியிலிருந்து பெற்றோர் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைப் பலனின்றி ஜனவரி 19-ம் தேதி உயிரிழந்தார். முன்னதாக, விடுதியில் உள்ள அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று வார்டன் பலவந்தப்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் பூச்சிமருந்தைக் குடித்ததாகவும் அந்தச் சிறுமி மரண வாக்குமூலம் அளித்தது அனைவரையும் பதறவைத்தது.

இந்நிலையில், மாணவி பேசிய மற்றொரு வீடியோ அவர் மரணத்துக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், இரண்டு வருடங்களுக்கு முன் விடுதி வார்டன் தன்னை மதம் மாற வற்புறுத்தியதாக சிறுமி தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, விடுதி வார்டன் சகாயமேரி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாறக்கூறி வருவதாகவும், அதற்கு சம்மதிக்காததால் விடுதி அறைகள் அனைத்தையும் மாணவியை சுத்தம்செய்ய வைத்து துன்புறுத்தியதாகவும், இதனால் மாணவி மனஉளைச்சலுக்கு ஆளாகி பூச்சி மருந்தைக் குடித்ததாகவும் அவர் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா, முதற்கட்ட விசாரணையில் மதமாற்ற குற்றச்சாட்டு எதுவும் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார். பா.ஜ.கவினர்,மாணவியின் மரணத்துக்குப் பின் வெளியிடப்பட்ட வீடியோவிலேயே எல்லாம் இருக்கிறது” என்று போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. மதமாற்றம் குறித்து சிறுமி பேசிய வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி நீதிபதி கேள்வி எழுப்ப, அந்த வீடியோவை எடுத்த மொபைல் போன் கிடைக்க முயன்று கொண்டிருப்பதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இன்றைக்கு அந்த மொபைல் போன் உரிமையாளர் காவல்துறையினரிடம் அதை ஒப்படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு