Job alert: என்ன படித்தால் நல்ல வேலை கிடைக்கும் ?

digital marketing and graphic design
என்ன படித்தால் நல்ல வேலை கிடைக்கும் ?

Job alert: கல்வி இல்லாமலே கோடீஸ்வர் ஆகலாம். இருப்பினும் படித்தால் மட்டும் தான், சிந்தனை வரும். விழிப்புணர்வு ஏற்படும். வெறும் கல்வியால் மட்டுமே மனிதன் முழுமை பெற முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளி அனுபவங்களே மனிதர்களுக்கு பல்வேறு விஷயங்களையும், நுணுக்கங்களையும் கற்றுக்கொடுக்கின்றன. எனவே படிக்கும் போதோ அல்லது படித்து முடித்த பிறகோ தனியாக ஒரு ஆன்லைன் கோர்ஸ் கற்றுக்கொள்வது அவசியம். ஆன்லைன் வகுப்புகளில் சிறந்து விளங்கும் இரண்டு படிப்புகளை பற்றி தற்போது பார்க்கலாம். முதலில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன? எங்கெல்லாம் படிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? மார்க்கெட்டிங் துறையில் வேலைவாய்ப்பு எப்படி உள்ளது? என்பது குறித்து பார்க்கலாம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு கடல் போன்றது.seo, sem, social media marketing என பல உள்ளடங்கங்கள் கொண்டது டிஜிட்டல் மார்க்கெட்டிங். தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப டிஜிட்டல் மார்க்கெட்டிங் பல பரிமாணங்களை அடைந்து வருகின்றது.

இன்னும் தெளிவாக பார்த்தால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது தயாரிப்புக்களையோ(Products) அல்லது சேவைகளையோ(Services) இணைய தொழில்நுட்பங்களை(Digital Technologies) பயன்படுத்தி இணையம்(Internet) வழியாக சந்தைப்படுத்தும்(Marketing) செயல்முறை ஆகும்.

இணைய சந்தைப்படுத்தலில் பல்வேறு முறைகள் உள்ளன. தொழிலின் குறிக்கோள் மற்றும் தன்மைக்கேற்ப தேவையான முறைகள் பல்வேறு காலகட்டங்களில் செயல்படுத்தப்படும். அவற்றில் சில:

தேடுபொறி உகப்பாக்கம் – Search Engine Optimization
கட்டணத் தேடுபொறிச் சந்தைப்படுத்தல் – Search Engine Marketing
சமூக வலைத்தள சந்தைப்படுத்தல் – Social Media Marketing
காணொளி சந்தைப்படுத்தல் – Video Marketing
உள்ளடக்கம் சந்தைப்படுத்தல் – Content Marketing
மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் – Email Marketing
மின்வணிக சந்தைப்படுத்தல் – E-Commerce Marketing
கைபேசி சந்தைப்படுத்தல் – Mobile Marketing

டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

டிஜிட்டல் திறன் கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. வேறொரு துறையில் பணியாற்றிக் கொண்டே டிஜிட்டல் மார்கெட்டிங் துறையிலும் சாதிக்கலாம்

பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் வணிகத் தேவைகளையும் அதன் வளர்ச்சியையும் மேம்படுத்த தங்களுக்கென்று சொந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளன.
வேலை தேடுபவர்கள், தொழில் மாற்றம் விரும்புபவர்கள, சந்தைப்படுத்தல் வல்லுநர்கள், இல்லத்தரசிகள் மற்றும் வணிக உரிமையாளர்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தங்கள் தொழிலாக தேர்வு செய்யலாம். இந்தத் துறையில் ரூ.25,000 முதல் 40 ஆயிரம் வரை அடிப்படை சம்பளம் பெறலாம்.

துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்: Market Research Analyst, Content Marketer/Manager, Digital Marketing Consultant, Conversion Rate Optimizer, SEO Manager/Professional, Email Marketer

பல லட்சம் ரூபாய் செலவு செய்து படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் ஏராளம். இதற்கு முக்கிய காரணம் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது தான். அதாவது இந்த சமுதாயத்திற்கு என்ன வேண்டும் என்பது தெரியாமல் புத்தகத்தில் உள்ளதை படித்து விட்டு அதனை நடைமுறை வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருப்பார்கள்.

காலத்திற்கு ஏற்ப நாமும் மாறித்தான் ஆகவேண்டும். எனவே நல்ல சம்பளத்தில் வளர்ந்து வரும் துறையில் ஆன்லைன் மூலம் படிக்க விரும்பினால் https://www.digitalmediaeducation.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது ஒன்பது நான்கு எட்டு ஒன்பது எட்டு ஏழு பூஜ்யம் இரண்டு ஒன்னு மூன்று என்ற நம்பரை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

கிராபிக் டிசைன்:

நம்மில் பலருக்கு வீடியோ எடிட்டிங் செய்வதில் அதிக ஆர்வமும், அதிக ஆசைகளும் இருக்கும். அதாவது பிறந்த நாள் கொண்டாட்டம், சுற்றுலா மற்றும் வீட்டில் நடைபெறும் இல்ல விசேஷங்கள் என அனைத்து தருணங்களையும் வீடியோக்கள் மூலம் சேமித்து வைத்து கொள்வோம். மேலும் வீடியோ எடிட்டிங் ஒரு படைப்பாகவும் உள்ளது. இதனை ஆன்லைன் மூலமாகவும் கற்றுக்கொள்ளலாம். இதில் adobe photoshop adobe premiere pro InDesign போன்றவை கற்று தரப்படுகிறது.

adobe photoshop adobe premiere pro InDesign ஆன்லைனில் கற்றுக்கொள்வது உண்மையில் சாத்தியமானது.

adobe photoshop adobe premiere pro InDesign இன்று கிடைக்கக்கூடிய மிகவும் சிக்கலான நிரல்களில் ஒன்றாகும். இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது, பட எடிட்டிங், லேயரிங், வலை பட தேர்வுமுறை, 3 டி படங்கள், அச்சுக்கலை மற்றும் வரைதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை உங்களுக்கு வழங்குகிறது.

கிராபிக் டிசைனிங் வேலைவாய்ப்பு என்பது எப்போதும் வாய்ப்புகளை வாரிவழங்கும் துறையாகும். பிராண்டுகள், பொருட்கள் மற்றும் சேவைகள் இவ்வுலகில் இருக்கும் வரையிலும் மற்றும் மக்கள் டிஜிட்டல் பொருட்களின் மேல் மோகம்கொண்டு, தங்களின் தனியுடைமையாக எண்ணும்  வரையிலும் கிராபிக் டிசைனர்களின் தேவை தவிர்க்க முடியாதது.

  சந்தைப்படுத்துதல், விளம்பரம், டிஜிட்டல் கல்வி முறை மற்றும் பொழுதுபோக்கு பொருட்களின் வளர்ச்சி போன்றவற்றால் திறமையான கிராபிக் டிசைனர்களும் வளர்ச்சி பெறுகிறார்கள்.

* அமெரிக்காவில், 1,97,540 கிராபிக் டிசைனர்கள் உள்ளனர், மேலும் அவர்களின் ஆண்டு வருமானம் சராசரியாக 50,670 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
* இந்தியாவில் ஆரம்ப நிலையில் உள்ள கிராபிக் டிசைனர்களின் ஆரம்ப ஆண்டு வருமானம் சராசரியாக 2.4 முதல் 3.6 லட்சங்களாகும். மேலும், 5 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ள தொழில்முறை நிபுணர்களுக்கு 6 முதல் 7.5 லட்சங்கள் வருமானமாக கிடைக்கிறது.
* தொழிலாளர் புள்ளியியல் அலுவலகக் குறிப்பின்படி திறமையான கிராபிக் டிசைனர்கள் தட்டுப்பாடு காரணமாக, கிராபிக் டிசைன் வேலையானது உலகளவில் அதிக சம்பளம் வழங்கப்படும் வேலையாக உள்ளது.

எனவே, உங்கள் சொந்த வீட்டின் வசதியிலிருந்து கிராபிக் டிசைன் கற்றுக்கொள்ளலாம். இதனை கற்று கொள்ளவிரும்பினால் https://www.digitalmediaeducation.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது ஒன்பது நான்கு எட்டு ஒன்பது எட்டு ஏழு பூஜ்யம் இரண்டு ஒன்னு மூன்று அல்லது எட்டு ஆறு ஒன்று பூஜ்யம் ஐந்து ஒன்பது ஒன்பது ஏழு நான்கு இரண்டு என்ற நம்பரை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: today share market : இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !