விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில், வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் தற்போது காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது தவிர வெப்ப சலனமும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.