துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

நேற்று முன்தினம் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.

மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் எண்ணூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதேபோல் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.