Weather Update: தமிழக மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

tamilnadu-tn-weather-update-for-3-days
மின்னலுடன் மழை

Weather Update: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்தது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: IPL 2022: குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு முதலில் பேட்டிங்