குளிர்காலத்தில் வறண்ட சருமத்தை பாதுகாக்க சில வழிகள்!!

குளிர்காலம் தொடங்கியவுடன் நமது சருமம் வறண்டு போக தொடங்குகிறது. வறண்ட சருமத்தில் ஒருவித அரிப்பு, இறுக்கம் ஆகியவை தோன்றும், இது நாளடைவில் சருமத்தில் சுருக்கம் ஏற்பட வழிவகுக்கும். இந்த குளிர்காலத்தில் உங்களுடைய சருமம் அதிக வறட்சியுடன் இருக்கிறதா? ஆம், என்றால் உங்கள் சருமத்திற்கு கூடுதல் பராமரிப்பு அவசியம்.

வெந்நீர் குளியல்

தினமும் 5-10 நிமிடங்கள் மட்டுமே குளிப்பதற்கான நேரம் ஒதுக்குங்கள்.தண்ணீர் மிகவும் சூடாக இருப்பதற்கு மாற்றாக வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும் . இதனால் உடலில் உள்ள இயற்கை எண்ணெய் இழக்கப்படாமல் இருக்கும்.

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும்

குளித்து முடித்த பின்னர் அல்லது கைகளைக் கழுவிய பின்னர் உடனடியாக மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் சரும அணுக்கள் இடையில் உள்ள இடைவெளி குறைந்து ஈரப்பதம் தக்கவைக்கப்படும் . இதனால் சருமம் நல்ல நிலையில் பாதுகாக்கப்படும்.

எண்ணெய் குளியல்
தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி குளிப்பது நலன் பலனைத் தரலாம். இருப்பினும் அதனை பயன்படுத்துவதால் குளியலறை மிகவும் வழுக்கலாம் அல்லது பாத் டப் வழுக்கலாம் என்பதால் பயன்படுத்துவதில் அதிக கவனம் தேவை.