கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு !

டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை கடந்த ஜூன் 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.அணைக்கு நேற்று மாலை தண்ணீர் வரத்து விநாடிக்கு 892 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர், முக்கொம்பு மேலணையையும் வந்து சேர்ந்தது.முக்கொம்புக்கு தண்ணீர் வரத்துநேற்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்தது.

முக்கொம்பில் திறக்கப்பட்டுள்ள நீர் நேற்று பிற்பகல் கல்லணையை சென்றடைந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவைசாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று காலைகாவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

மேலும் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன், சிவசங்கர் ஆகியோர் தண்ணீரை திறந்து வைக்கஉள்ளனர்.