Warner Media: ரஷியாவில் இருந்து வெளியேறியது வார்னர் மீடியா

வார்னர் மீடியா

Warner Media: உக்ரைன் மீது ரஷியா 15-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்து உள்ளனர்.

ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது.

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

மேலும், ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

இந்நிலையில், ரஷியாவில் அனைத்து புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என வார்னர் மீடியாவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: Election Results 2022: உத்தரபிரதேசம், கோவா மாநிலங்களில் பா.ஜ.க முன்னிலை