Vishal New Movie: ஓடிடியில் வெளியானது விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’

Vishal New Movie: நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்த ‘வீரமே வாகை சூடும்’ கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள். விஷால் நடித்து தயாரித்த இப்படம் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

‘வீரமே வாகை சூடும்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், படம் வெளியாகி 1 மாதம் ஆவதால் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: Shane Warne expired: சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார்

போரஸ் ஒரு ஆர்வமுள்ள போலீஸ்காரர். அவரது தந்தை (மாரிமுத்து) கீழ்நிலை போலீஸ்காரர். அவரது தாயார் (துளசி) ஒரு தமிழ் சினிமா தாய், தன் மகனை அற்புதமாக நினைக்கிறார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் தங்கச்சிகள் இருந்த அதே காரணத்திற்காகவே அவரது தங்கச்சி துவாரகா (ரவீனா ரவி) இருக்கிறார். அக்கா சென்டிமென்ட்+ ஹீரோ தனது ஆண்மையை வெளிக்காட்டுவதற்கான நோக்கம். அவரது நெருங்கிய நண்பர் தளபதி (யோகி பாபு), ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பெண்களை காதலித்து அவர்களை காதல் கடிதங்களால் துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டவர்.