ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு

கடந்த ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்தவவகையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தை அஜித் (Ajith), விக்ரம் நடித்த ’உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும்.

இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.