கே.டி.ராகவன் ஒரு காம ராகவன்- பத்திரிகையாளர் மதன்குமார்

தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ஒரு காம ராகவன் என்று அவரின் உண்மை முகத்தினை தோலுரித்திருக்கிறார் பத்திரிகையாளர் மதன்குமார் ரவிச்சந்திரன்.

பாஜகவில் கால்நூற்றாண்டு காலமாக இருப்பவர் கே.டி.ராகவன். அவர் என்னோட செங்கல்பட்டு மாவட்டத்துக்காரர்தான். எல்லா கட்சியினரிடையேயும் நெருக்கமாக காட்டிக்கொள்ளக்கூடியவர் கே.டி.ராகவன். அவர் இந்த அளவுக்கு மோசமானவராக இருப்பார் என்று நான் அந்த நிமிடம் வரைக்கும் நினைக்கவே இல்லை என்கிறார் மதன்.

அவர் மேலும், இந்து மத காவலன் என்று சொல்லிக்கொண்டு அதுவும் பூஜை அறையில் உட்கார்ந்துகொண்டு, ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசி அந்த பெண்ணின் உடைகளை அகற்றச்சொல்லிவிட்டு, தான் தனது ஆணுறுப்பினை பிடித்துக்கொண்டு சுய இன்பம் செய்துகாட்டுகிறார். தனது மார்பின் காம்புகளை காட்டிஅது மாதிரியே அந்த பெண்னையும் காட்டச்சொல்கிறார்.

பாஜகவில் எல்லா பெண்களும் இப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால், நிறைய பெண்கள் இப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறைய பெண்கள், எங்களை கூப்பிடுவார்கள்.

நாங்கள் ஓடிவந்துவிடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று அதிரவைக்கிறார்.இந்த பெண், ராகவன்ன் பற்றிய உண்மைகளை வெளியே கொண்டு வரவேண்டுமென்று துணிந்து வீடியோ எடுக்க சம்மதித்தார்.

இந்த வீடியோவை எடுத்த பின்னர் பாஜக தலைமையிடம் போட்டு காட்டி நடவடிக்கை எடுக்க சொன்னேன். நீங்களே வெளியிட்டு நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லிவிட்டனர். அனுமதி பெற்ற பின்னர்தான் வெளியிடுகிறேன்.

குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் போட்டு காட்டி, பாதிக்கப்பட்ட பெண்ணின் நியாயத்திற்காக உங்கள் விருப்பப்படி வெளியே சொல்லுங்கள் என்று சொன்னதன் பிறகுதான் வெளியிடுகிறேன்.ஒரு பத்திரிகையாளனாக நான் துணிந்த இந்த தகவலையும், வீடியோவையும் வெளியிடுகிறேன்.

இதனால் எனக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள்தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும். திமுக என்னை பழிவாங்காது.

ஆனால், ஒருவேளை அக்கட்சியும் சேர்ந்து என்னை பழிவாங்கினால், என்னையும் என் குடும்பத்தையும் பழிவாங்கினால் நடுநிலையாளர்கள்தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் மதன்.