அபிநந்தனுக்கு ‘பீர் சக்ரா விருது’

பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் குடிமக்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவில்லை.

எனவே கடந்த ஆண்டு (2020) மற்றும் இந்த ஆண்டுக்கான விருதுகள் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27,-ம் தேதி பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு பீர் சக்ரா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்குகிறார்.

மேலும் மேஜர் விபூதி சங்கருக்கு ஐந்து பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று மற்றும் 200 கிலோ வெடிபொருட்கள் மீட்கும் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்ட அவரது வீர தீர செயலுக்காக சௌரிய சக்ரா (மரணத்திற்குப் பின்) விருதை பெறுகிறார். அவரது சார்பில் அவரது குடும்பத்தார் பெற்றுக்கொள்கின்றனர்.