பிக் பாஸ் 5ம் சீசன் பற்றிய அப்டேட்..!

பிக் பாஸ் 5ம் சீசன் எப்போது தொடங்கும் என்று தான் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் தற்போது வெயிட்டிங். அவர்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் விதமாக பிக் பாஸ் 5 பற்றிய அப்டேட் இந்த வாரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்டுகிறது.

ஐந்தாம் சீசனுக்காக வழக்கம் போல இவிபி ஸ்டூடியோவில் ஒரு பிரம்மாண்ட வீடு செட் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் பணிகளும் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நேற்று பிக் பாஸுக்காக சில ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை மாலை வெளிவரும் என தகவல் பரவி வருகிறது.