Vigilance dept seizes Rs 1.12 crore: தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.. ரூ.1.12 கோடி பறிமுதல்

சென்னை: Vigilance dept seizes Rs 1.12 cr in unaccounted cash in Tamil Nadu govt office raids. தமிழகம் முழுவதும் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தொழில்துறை, வட்டார போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, வணிகவரித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர ஊரமைப்புத்துறை, வேளாண்மைத்துறை, மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய 16 துறை சார்ந்த 46 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூபாய். 1,12,57,803/- மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ரூ.8.87 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. விருதநகர் ஏ.டி., அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையினர் நடத்திய மற்றொரு சோதனையில் ரூ.6.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் வேளாண்மை அலுவலக உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.4.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 290-ஐ பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1.25 லட்சமும், தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரம், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ.2.25¼ லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.14 ஆயிரமும், திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது.

இதில் 27 அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.1.12 கோடி ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.