பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார் !

1987 ஆம் ஆண்டு உருவான தொடர் ’ராமாயணம்’. தூர்தர் ஷனில் ஒளிபரப்பான இந்த தொடரில் ராமனாக, அருண் கோவில் நடித்திருந்தார்.இதில் ராவணனான அரவிந்த் திரிவேதி நடித்திருப்பார்.இது மிகவும் பிரபலமான தொடர்.

தற்போது அரவிந்த் திரிவேதி காலமாகியுள்ளார்.அவருக்கு வயது 82 .நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இவர் காலமாகியுள்ளார்.

மேலும் நடிகர் அரவிந்த் திரிவேதியின் மறைவுக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் ராமாயனம், தொலைக்காட்சித் தொடரில் அவர் நடித்த ராவணன் கதாபாத்திரம் பல தலைமுறை நினைவுக்கூரப்படும் என கூறியுள்ளார்.

அரவிந்த் திரிவேதி மறைவை அடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்களும் நடிகர், நடிகைகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு !