valimai update : வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு

valimai update : வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு
வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு

valimai update : வினோத் இயக்கத்தில், போனி கபூர் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் வலிமை.அஜித்தின் வலிமை திரைப்படம் 2022 பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும். இப்படம் பல மொழிகளில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வலிமையின் தயாரிப்பு மற்றும் வெளியீடு பல முறை தாமதமானது.

வலிமை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜீ ஸ்டுடியோஸ், ரசிகர்களுடன் மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது. அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது.

இந்நிலையில் ‘வலிமை’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.மேலும் திரைப்படத்துக்கு சென்சார் போர்டு யூஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : Gold and silver rate :உயரும் தங்கத்தின் விலை !