Valimai Making Video: ‘வலிமை’ படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ வெளியீடு..!

Valimai Making video
Valimai Making video

Valimai Making Video: அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போனிகபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் அஜித் உள்பட படக்குழுவினர்களின் கடினமான உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தருகிறது.

குறிப்பாக இந்த வீடியோ முடிவடையும்போது சீறிவரும் பைக்கில் வரும் அஜித், திடீரென கீழே விழுவதும் அதன் பின் எழுந்து சுதாரித்து எழுந்து மீண்டும் அதே ஷாட்டுக்காக சீறி வரும் பைக்கை ஓட்டுவதுமான காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Bhringraj Oil :முடி கருமையாக செழித்து வளர உதவும் கரிசலாங்கண்ணி !

Bhringraj Oil: தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும்.

கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.

பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும் நரையும் மாறும்.

இப்படிப்பட்ட கரிசலாங்கண்ணி எண்ணெயை கிராம புறங்களில் பலர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கரிசலாங்கண்ணி எண்ணெயை வாங்க விரும்பினால் 9791886213 என்ற நம்பருக்கு போன் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க : Earthquake Hits Indonesia: இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் !