Uttarakhand accident: திருமண வீட்டில் எதிர்பாராத சோகம்: 14 பேர் உயிரிழப்பு

uttarakhand-road-accident-champawat-vehicle-falls-into-gorge-death-toll

Uttarakhand accident:  உத்தராகண்ட் :மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியவர்களின் வாகனம் பள்ளதாக்கில் விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வு அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் போலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் திருமண நிகழ்விற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளனர். அப்போது, சம்பவத் மாவட்டம் அருகே உள்ள, சுக்கிதங்க் மலை பகுதியில் அவர்கள் பயணம் செய்த வாகனம், நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. இந்த விபத்து விடியற்காலை நேரத்தில் நடத்துள்ளது. பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட வாகன ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுக்கிதங்க் பள்ளதாக்கு பகுதிக்கு விரைந்தனர்.

இதனையடுத்து வாகனத்தில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்ததாக, குமோன் பகுதி டிஐஜி நிலேஷ் ஆனந்த் பானே தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் மோடி, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Uttarakhand accident: 14 dead after vehicle falls into gorge in Champawat

இதையும் படிங்க: Healthy lifestyle : முடி வளர சின்ன சின்ன ரகசியம்..!