Uttarakhand accident : திருமண நிகழ்வில் நடந்த விபரீதம்

uttarakhand-road-accident-champawat-vehicle-falls
திருமண நிகழ்வில் நடந்த விபரீதம்

Uttarakhand accident : உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். நேற்று அதிகாலை சுகிதாங் ரீத்தா சாஹிப் சாலைக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குமாவோன் டிஐஜி நிலேஷ் ஆனந்த் பர்னே கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் தனக்பூரில் உள்ள ஒரு திருமணத்திலிருந்து மாவட்டத்தில் உள்ள தண்டா கக்னாய் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.உள்ளூர் நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி ட்வீட் செய்துள்ளார்.Uttarakhand accident

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் (பிஎம்என்ஆர்எஃப்) இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்.உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத்தில் நடந்த விபத்து இதயத்தை உலுக்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க : malayalam cinema : பிரபல நடிகை லலிதா காலமானார்
இதையும் படிங்க : Today petrol diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

(14 people died in uttharkhand vehicle accident )