இந்தியா-சீனா பதற்ற நிலைமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!!!

லடாக்கில் இந்தியா-சீனா பதற்ற நிலைமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள விரும்புவதாக அமெரிக்க மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்து இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான 2 + 2 உரையாடலுக்கு முன்னால் வந்துள்ளது குறிப்பிட தக்கது.அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் 2 + 2 உரையாடலுக்கு இந்தியா வர உள்ளனர். அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

சீனாவின் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்பு நடத்தைகளை எதிர்கொள்ள இந்தியா போன்ற “ஒத்த எண்ணம் கொண்ட” நாடுகளுடன் இணைந்து செயல்படுவது முக்கியம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.