US congressional group: அமெரிக்க எம்.பி.க்கள் குழு தைவானுக்கு திடீர் பயணம்

அமெரிக்க எம்.பி.க்கள் குழு தைவானுக்கு திடீர் பயணம்

US congressional group: சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின்ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது.

அதேவேளை, தீவு நாடான தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தைவானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ராணுவ ஆயுதங்களை வழங்கி வருகிறது.

இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் போன்று தைவான் மீது சீனா படையெடுத்து தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால், தென் சீன கடல் பரப்பில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க எம்.பி.க்கள் குழு இன்று தைவானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க எம்.பி.க்கள் 6 பேர் தைவானுக்கு சென்றுள்ளனர். இந்த குழு தைவான் அதிபர் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

US congressional group lands in Taiwan, will meet President Tsai Ing-wen

இதையும் படிங்க: Good Friday: கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி வழிபாடு