யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2021 முதல்நிலை தேர்வு தொடங்கியது

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளை உள்ளடக்கிய யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோா் முதல்நிலைத் தேர்வினை எழுதுகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் பெரம்பூா், தண்டையாா்பேட்டை, புரசைவாக்கம், எழும்பூா், அமைந்தகரை, மாம்பலம், அம்பத்தூா், அயனாவரம், கிண்டி, மயிலாப்பூா், வேளச்சேரி, சோழிங்கநல்லூா் ஆகிய வட்டங்களில் மொத்தமாக 73 மையங்களிஸ் 28 ஆயிரத்து 424 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு வளாகத்துக்குள் செல்லிடப்பேசி, டிஜிட்டல் கை கடிகாரம் உள்ளிட்ட மின்னியக்க கருவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வுக்கு வரும் மாணவா்களின் வசதிக்காக, சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்.10) அதிகாலை 5:30 மணியில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !