Russia-Ukraine Crisis: உக்ரைன்-ரஷியா போரை நிறுத்த ஐ.நா.தொடர்ந்து முயற்சி

உக்ரைன்-ரஷியா

Russia-Ukraine Crisis: உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரை முடிவுக்கு வரும் முயற்சியில் ஐ.நா.பொதுச்சபை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் நிலைமை குறித்து விவாதிக்க ஐ.நா. உயர் அதிகாரி மாஸ்கோ செல்ல உள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் வரும் ஞாயிற்றுக்கிழமை ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்ற பின்னர் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு செல்ல உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரை சந்திக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக குட்டரெஸ் கூறினார்.

ஏமன், உக்ரைன் என உலகில் எல்லா இடங்களிலும் சண்டையை நிறுத்தும் நடவடிக்கையை நாங்கள் கைவிடவில்லை என்பதை இந்த பயணம் எடுத்துக் காட்டுவதாக குட்டரெஸ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Will Smith: ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித்