Russia-Ukraine crisis: ரஷியாவிடம் இருந்து கீவ் விமான நிலையத்தை மீண்டும் கைப்பற்றியது உக்ரைன்

Russia-Ukraine crisis: உக்ரைன் நாட்டின் மீது நேற்று ரஷியா போர் தொடுத்தது. சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது.

நேற்றைய தாக்குதலில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் வீழ்த்தினர். 2 ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் சிறைப்பிடித்தும் இருக்கிறது.

இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து கீவ் விமான நிலையத்தை மீண்டும் கைப்பற்றி உள்ளதாக் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

மேலும், ரஷியாவுக்கு எதிராக முழு ராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முடிக்கும்படி ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள நபர்களின் எண்ணிக்கை மற்றும் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும்.

ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும். இதற்கான நிதியை ஒதுக்கும்படி உக்ரைன் அமைச்சரவையை அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

Russia-Ukraine crisis

இதையும் படிங்க: NSE Scam: தேசிய பங்குச் சந்தை முறைகேடு: ஆனந்த் சுப்பிரமணியன் கைது