UGC : இரண்டு பட்டப்படிப்புகள் ஒரே நேரத்தில் அனுமதி

UGC
இரண்டு பட்டப்படிப்புகள் ஒரே நேரத்தில் அனுமதி

UGC : பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வழிகாட்டுதல்களின் கீழ் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களைத் தொடர முடியும் என்று அதன் தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில், இரு பட்டப் படிப்புகளை பயில அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால், இப்படிப்புகளை இரு வேறு பல்கலையில் கற்கலாம். அதுபோல ஒரு பட்டப் படிப்பை கல்லுாரியிலும், மற்றொரு பட்டப்படிப்பை ஆன்லைன் வாயிலாகவும் கற்கலாம். இல்லை இரண்டையும் நேரடி வகுப்புகளாகக் கற்பது என்றால் வெவ்வேறு கல்லூரி நேரங்களில் அவற்றில் சேர்ந்து கற்கலாம்.

இந்த நடவடிக்கை மாணவர்களை ஒரே பல்கலைக்கழகம் அல்லது இரண்டு வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து இரண்டு ஆஃப்லைன் படிப்புகளைத் தொடர அனுமதிக்கும் அல்லது ஆன்லைன் அல்லது திறந்த மற்றும் தொலைதூரக் கல்வியுடன் கூடிய ஆஃப்லைன் படிப்பைத் தேர்வுசெய்யும்.

இந்த புதிய நடைமுறை மூலம் மாணவர்கள் பல் துறை சார்ந்த அறிவைப் பெறும் வாய்ப்பினைப் பெறுவார்கள் என்று யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் கூறினார்.UGC

இதையும் படிங்க : Mangalya Dosham: மாங்கல்ய தோஷம் நீங்க இதை செய்யுங்கள்

அனுமன் கலியுக மக்களைக் காப்பவராக கருதப்படுகிறார். இவரை மனதார நம்பிக்கையுடன் வணங்கினால், அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் நம்மைக் காப்பார். இவர் பொதுவாக குங்குமப்பூ நிறத்தில் சித்தரிக்கப்படுவார். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இந்த செந்தூர நிறம், உயிராற்றலின் நிறம்.

மற்றொன்று, ஒரு நாள் சீதை தன் நெற்றி உச்சியில் செந்தூரத்தை தடவினார். அதைக் கண்ட அனுமன் சீதையிடம் ‘ஏன்?’ என்று கேட்டார். அதற்கு சீதை, “இது ராமபிரான் நீண்ட காலம் செழிப்பாக இருக்க அவரை ஆசீர்வதிக்கும் வகையில் செய்யும் ஓர் செயல்” என்று கூறினார். இதைக் கேட்ட அனுமன் உடனே தன் உடல் முழுவதும் இந்த செந்தூரத்தை தடவிக் கொண்டார்.