12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க UAE தடை..!!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பாகிஸ்தான் மற்றும் பிற 11 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு புதிதாக விசாக்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்த 12 நாடுகளில் இந்தியா இல்லை. பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் புதன்கிழமை செய்தியை உறுதிப்படுத்தியது என பாகிஸ்தான் செய்தித்தாள் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கியுள்ளதால், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது என்று கூறினார்.