நடிகை பைரவி தீக்குளிக்க முயற்சி

நடிகை பைரவி தீக்குளிக்க முயற்சி
நடிகை பைரவி தீக்குளிக்க முயற்சி

Actress Suicide attempt: பிரபல சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்கிற பைரவி. கடந்த மார்ச் மாதம் வேலூரைச் சேர்ந்த ராஜா தேசிங்கு என்கிற சுப்பிரமணி தயாரிப்பாளர் மீது போலீஸில் புகார் அளித்திருந்தார். அதில் தயாரிப்பாளரான ராஜா தேசிங் தன்னையும் தயாரிப்பாளர் ஆக்குவதாக கூறி தன்னுடன் பழகினார் என்றும் பின்னர் பட விஷயமாக மயிலாடுதுறைக்கு அழைத்து சென்று கோவிலில் வைத்து கட்டாய தாலி கட்டினார் என்றும் கூறியிருந்தார்.

தாலி கட்டிவிட்டு தன்னையும் தனது மகள்களையும் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவதாகவும், இல்லையெனில் கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். மேலும் தன்னை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தும் ராஜா தேசிங்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஜா தேசிங்கு தன்னையும் தனது குழந்தைகளையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார் என நேற்று மீண்டும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார் பைரவி. அப்போது கையில் இருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் பைரவி.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பைரவி மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். மேலும் அவரது புகார் தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Holiday Announcement: ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை