இந்தியாவில் 63 லட்சத்தை கடந்த கரோனா டிஸ்சார்ஜ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 74,632 பேர் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 63 லட்சத்தை கடந்தது.

மேலும் ஒரே நாளில் 63,509 பேருக்கு கரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 72.39 லட்சத்தை கடந்தது. 8.26 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று (அக்.,13) ஒரே நாளில் 11,45,015 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 9 கோடியே 90 ஆயிரத்து 122 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.