TN students Ukraine: மாணவர்களுக்கு இலவசம் அரசு அறிவிப்பு

toll-free-call-center-in-tamilnadu-for-counseling-to-students-returning-to-from-ukraine
மாணவர்களுக்கு இலவசம்

TN students Ukraine: உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே தற்போது போர் நடைபெற்று வருகிறது. சென்ற மாதம் தொடங்கிய இந்த போர் தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதையடுத்து உக்ரைனில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேபோல், மாணவர்கள் மீட்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு சார்பில் இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்தனர் போர் தொடங்கியதை அடுத்து ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் இந்திய மாணவ மாணவிகள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

உக்ரைனில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த மாணவர்கள் போர் காரணமாக தாயகம் திரும்பியதால் அவர்கள் படிப்பை தொடர இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது தற்போது இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது அதுவும் இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Toll free call center in Tamil Nadu for counseling to students returning to from Ukraine

இதையும் படிங்க: Edible oil: சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.40 அதிகரிப்பு