Horoscope today: இன்றைய ராசி பலன்

ராசி பலன்
இன்றைய ராசி பலன்

Horoscope today: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு இருக்காது. சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படலாம். சுயத் தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை ஏற்படலாம்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட தன லாபம் பெருக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் கவனம் தேவை. பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சுய தொழில் புரிபவர்கள் மாற்றம் காண்பீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள். மூன்று நபர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க இருப்பதில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம்.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் முயற்சியில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் நீண்ட நாள் இழுபறியில் இருந்து வந்த காரியம் ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். வெளியிடங்களில் உடைமை மீது கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும்.

.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முயற்சிகளுக்கு பலவிதங்களிலும் எதிர்ப்புகள் வலுவாகும். சுய தொழில் புரிபவர்களுக்கு துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்டகால கனவுகள் பலிக்க கூடிய நாளாக இருக்கும். சக போட்டியாளர்கள் உடன் இணைந்து செயல்படுவீர்கள்.

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தேவையில்லாதவர்களுக்கு ஜாமீன் போடுவதில் எச்சரிக்கை செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும்.

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண வரவு உண்டாவதில் சிறப்பான பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். இந்த நாள் மனோதிடம் அதிகரித்து காணப்படும் என்பதால் கவலை கொள்ள தேவையில்லை. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைப்பதில் உறுதியாக இருப்பது நல்லது.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நட்பு வட்டம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும்.

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களை நீக்கி தெளிவாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் பெறுவீர்கள். வெளிநாடு வெளியூர் தொடர்பான வேலை விஷயங்களில் சாதக பலன் உண்டு. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு முடிவையும் தன்னம்பிக்கையுடன், துணிச்சலுடன் எடுப்பது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தொலை தூர இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் அதிகம். உங்கள் நேர்மைக்கு உரிய பரிசு கிடைக்கும். அசிங்க மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன் உண்டாகும்.

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் எங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத மாற்றம் உற்சாகத்தை கொடுக்கும்.

இதையும் படிங்க : Polio drive: தமிழகத்தில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு

( horoscope prediction for 25-02-2022 )