பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 101.37 ரூபாய், டீசல் லிட்டர் 94.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் விலை உயர்ந்து 101.67 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.