இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

மக்களின் அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றாக இருப்பது பெட்ரோல் மற்றும் டீசல்.தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல் ரூபாய் 97 .19 ஆக விற்பனையானது.இன்று 24 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூபாய் 97.43 ஆக விற்பனையாகிறது.நேற்று டீசல் லிட்டர் ரூபாய் 91.19 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூபாய் 91 .64 ஆக விற்பனையாகிறது.

இந்தியாவில் சில மாநிலங்களின் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.தற்போது தமிழகத்தில் அந்த நிலைமை வந்து விடும் என்று வாகனஓட்டிகள் அச்சம் கொள்கின்றனர்.