இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

மக்களின் அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றாக இருப்பது பெட்ரோல் மற்றும் டீசல்.தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.19 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.42 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் ரூபாய் 100 தொட்டு விடுமோ என்று வாகன ஓட்டிகள் அச்சம் கொள்கின்றனர்.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.