Today Horoscope: இன்றைய ராசி பலன்

Today horoscope
ராசி பலன்

today horoscope : மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொழில் ரீதியாகச் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் லாபகரமான பலன்களை அடைவீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி நிம்மதி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நிம்மதியாக இருக்கும். வியாபார ரீதியாகப் பார்க்கும் போது பல்வேறு மேன்மையை அடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளது.வேலைக்கு செல்பவர்கள் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி உங்களுடைய திறமை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க கூடிய முடிவில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் குறித்த விஷயங்களில் கவனம் தேவை.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூல பலன் பெற இருக்கிறீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசி தீர்த்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் கவனம் தேவை. ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூடுமான வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் பார்த்து பழகுவது நல்லது. சமயோசித புத்தி உங்களை முன்னேற்றம் அடைய செய்யும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.  பேச்சில் சற்று பொறுமையுடன் இருப்பதும் அவசியம். உடனிருப்பவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடியைத் தரக்கூடும். தொழில் ரீதியாக பார்க்கும்போது சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் அடையக்கூடிய லாபம் நீங்கள் அடைய கூறுவீர்கள். 

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் மூலம் மன அமைதி கிடைக்கும். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை ஆற போடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்றம் காணும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் மேலும் வளர்க்காமல் இருப்பது நல்லது.

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் தொழிலில் லாபகரமான பலனை அடையலாம். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.நீண்டநாட்களாக வேலைக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும். பொருட்கள் வாங்கக் கூடிய வாய்ப்பு உள்ளது குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு உதவிகரமாக இருக்க போகிறது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்கள் அமையலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகளை, அமைதியான சூழ்நிலையில் பேசிக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்களுடைய கூடுதல் உழைப்பைக் கொடுத்து முன்னேறக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் காணும்.

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக காப்பாற்றுவீர்கள். தொழிலில் லாபகரமான பலனை அடைவீர்கள்.நீண்ட நாட்களாகத் தொழிலில் இருந்த தடைகள் விலகி லாபமான சூழ்நிலை ஏற்படும். வேலைக்கு செல்பவர்களும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சக நண்பர்களின் உதவி சிறப்பாக கிடைக்கும்.

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொழில் ரீதியாக பார்க்கும்போது புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். இன்றைய நாளில் இருக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள் குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மிக சிறப்பாக நடைபெற வாய்ப்புள்ளது.Today Horoscope

இதையும் படிங்க : Corona virus: தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

( daily horoscope for 27-02-2022 )