இன்றைய ராசி பலன் !

ராசி பலன்
இன்றைய ராசி பலன்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளி இடங்களில் புதிய நட்பை வளர்த்துக் கொள்வீர்கள். 

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். 

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றியை காணக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் அவர்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவ கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்கவலைகள் அகன்று புது பொலிவுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் துயரங்கள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் அனுசரணையாக செல்வது நல்லது.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடந்த கால நினைவுகளை அசை போட்டுப் பார்க்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாக வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கவலைகள் நீங்கி படிப்படியான முன்னேற்றம் பெருகும்

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களுடைய மனதை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே புதிய புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் தொகை கைக்கு வரும்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் அமைய இருக்கிறது. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது